ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்
11 ஆனி 2024 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 2697
ரஷ்ய(Russia) கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் (Ukraine) சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில் 27 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரானது 2 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.