Paristamil Navigation Paristamil advert login

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம மாயம்!

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம மாயம்!

11 ஆனி 2024 செவ்வாய் 08:18 | பார்வைகள் : 2272


மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாகவும் மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. 

மலாவி நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டப்படி தரையிறங்க வேண்டும்.

எனினும் விமானம் ரேடாரில் இருந்து விலகியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த மே மாதம், ஹெலிகொப்டரில் சென்ற ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்லிட்ட உஅர் அதிகாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்