இணையத்தளமூடாக 4 மில்லியன் யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது!
10 ஆனி 2024 திங்கள் 14:25 | பார்வைகள் : 10149
இணையத்தளமூடாக மோசடியில் ஈடுபட்டு நான்கு மில்லியன் யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Nanterre நகரை தலைமையிடமாக கொண்டு செயற்பட்ட மூவரும் 28 தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள், இணையமூடாக தளபாடங்கள் விற்பனை செய்வதாக விளம்பரங்கள் கொடுத்து முன்பதிவுக்காக பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒருபோதும் தளபாடங்களை விநியோகிக்கவில்லை.
தீவிர விசாரணைகளின் பின்னர் ஜூன் 3 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இதுவரை 4 மில்லியன் யூரோக்கள் மொத்தமாக மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்களிடம் இருந்து 200,000 யூரோக்கள் பெறுமதியுடைய பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan