இஸ்ரேலிய அமைச்சர் Benny Gantz இராஜினாமா...!
10 ஆனி 2024 திங்கள் 09:42 | பார்வைகள் : 7900
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz)என்பவரே பதவி விலகியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் பென்னி கிராண்ட்ஸ்(Benny Gantz ), அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டெல் அவிவ் நகரில் நேற்று 09.06.2024 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பென்னி கிராண்ட்ஸ்(Benny Gantz ), ஆழ்ந்த வருத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan