Tulle நகருக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்..!
 
                    10 ஆனி 2024 திங்கள் 08:05 | பார்வைகள் : 13186
இன்று ஜூன் 10, திங்கட்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Tulle (Corrèze) மற்றும் Oradour-sur-Glane (Haute-Vienne) ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படையினால் சிதைக்கப்பட்ட நகரங்களான அவற்றின் 80 ஆவது ஆண்டு நினைவு நாளை கொண்டாட அங்கு பயணிக்க உள்ளார்.
ஜூன் 10, 1944 ஆம் ஆண்டு இங்கு ஒரே நாளில் 643 பேர் நாசிப்படையினரால் கொல்லப்பட்டனர். அக்கிராமத்தில் இருந்த மொத்தப் பேரில் ஆறு பேர் மட்டுமே உயிர் தப்பினார்கள். வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்றான இதன் நினைவு நாளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதி மக்ரோன் அங்கு இன்று காலை விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
சென்றவாரம் Normandie தரையிறக்கத்தின் நினைவு நாள், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல், தேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என பெரும் பரபரப்புக்கு நடுவே, மக்ரோன் தனது பணிகளை தொடர்ந்துகொண்டுள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan