Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு

இலங்கையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு

10 ஆனி 2024 திங்கள் 05:49 | பார்வைகள் : 6506


ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறையில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டுமாத குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கற்களால் ஆன சிறிய வீடொன்றில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த நிலையிலே, அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்