பரிஸ் : கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த நபர்.. படுகாயம்!!
9 ஆனி 2024 ஞாயிறு 16:12 | பார்வைகள் : 16249
நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்த நிலையில், அவர் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இறுதியில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Nationale வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் குதித்துள்ளார். மூன்றாவது தளத்தில் இருந்து அவர் குதித்ததில் எலும்பு முறிவுக்கு உள்ளானார். பின்னர் அவர் மீட்கப்பட்டு Pitié-Salpêtrière (13 ஆம் வட்டாரம்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அன்று காலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவரை விடுதலை செய்ய பணம் கோரியிருந்த்தாகவும், அதன் பின்னரே அவர் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இசம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan