Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் இரண்டு வயது பெண்குழந்தைக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் இரண்டு வயது பெண்குழந்தைக்கு நேர்ந்த கதி

26 ஆவணி 2023 சனி 04:18 | பார்வைகள் : 13548


வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிட்ட கொண்டிருந்தது. எனினும், சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில்  பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.

சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்