அமெரிக்கா பிரபல விண்வெளி வீரர் மரணம்

9 ஆனி 2024 ஞாயிறு 02:31 | பார்வைகள் : 6098
அமெரிக்கா பிரபல விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் (வயது 90) விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்லியம் ஆண்டர்ஸ் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார்.
அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தவர்.விண்வெளியில் இருந்து பூமியின் முதல் வண்ணப் புகைப்படம் இதுவாகும். இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வில்லியம் ஆண்டர்ஸ் , தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.
அப்போது வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழுந்தது. விபத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025