எலிசே மாளிகையில் ஜோ பைடனுக்கு விருந்துபசாரம்!!
8 ஆனி 2024 சனி 13:48 | பார்வைகள் : 2887
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவுநாள் கொண்டாட்டம் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது. மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்சுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவரும், இன்று மூன்றாவது நாள், பரிசுக்கு வருகை தர உள்ளனர்.
இந்நிலையில், இன்று இரவு ஜோ பைடன் மற்றும் அவரது துணைவியாரும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோனும் எலிசே மாளிகையில் இரவு உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.