கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ள இலங்கையின் முன்னணி வீரர்

8 ஆனி 2024 சனி 12:26 | பார்வைகள் : 5263
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தக்கவைக்கவுள்ள வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ச (Bhanuka Rajapaksa)இடம்பெற்றுள்ளார்.
இந்த தொடரில் பங்கு கற்றும் வீரர்கள் பட்டியல் 06 வெளியிடப்பட்டது.
இதன்படி இந்த பட்டியலில் பானுக்க ராஜபக்ச மற்றும் தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன், ஆப்கானின் சுழல்வீரர் நூர் அஹ்மட், நமீபியாவின் வேகப்பந்து சகலதுறை வீரர் டேவிட் வீஸே, தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்டவீரர் பாப் டு பிளேசிஸ் ஆகியோரும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரமான கொலின் மன்ரோ சிம்பாப்வே வீரர்களான சிக்கன்தர் ரஷா மற்றும் ஷேன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியினால் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3