டென்மார்க் பிரதமர் பிரதமரை தாக்கிய நபர் கைது...

8 ஆனி 2024 சனி 12:14 | பார்வைகள் : 6076
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Copenhagen நகரில் பிரதமர் மெட்டே பிரெடெரிக்செனை (Mette Frederiksen) அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டார்.
உடனே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பிரதமர் காயமடையவில்லை என்றும், அவர் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருப்பதாக தோன்றியதாகவும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நபர் குறித்து பொலிஸார் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் பிரதம அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் வெள்ளிக்கிழமை மாலை Copenhagenயில் உள்ள Kultorvetயில் நபர் ஒருவரால் தாக்கப்பட்டார், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் டேன்ஸ் வாக்கெடுப்புக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025