’உக்ரேனில் கொல்லப்பட்ட பிரெஞ்சு இராணுவத்தினர்! - பிரேதப்பெட்டிகள் அச்சுப்பதிப்பு!

8 ஆனி 2024 சனி 07:59 | பார்வைகள் : 9596
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் சில இடங்களில் சுவற்றில் பிரேதப்பெட்டிகளின் படங்கள் அச்சுப்பதிக்கப்பட்டுள்ளன. அதன் அருகே ‘உக்ரேனில் கொல்லப்பட்ட பிரெஞ்சு இராணுவத்தினர்’ என எழுதப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், ஈஃபிள் கோபுரத்தின் அருகே ஐந்து பிரேதப்பெட்டிகள் வைக்கப்பட்டு இதே வசனம் எழுதப்பட்டிருந்த நிலையில், மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இம்முறை பிரேதப்பெட்டிகளுக்குப் பதிலாக அவற்றின் புகைப்படங்கள் அச்சுப்பதிக்கப்பட்டுள்ளன.
நேற்று ஜூன் 7 ஆம் திகதி காலை, 7 ஆம் வட்டாரத்தின் பல கட்டிடங்களில் இதனைக் காணக்கூடியதாக இருந்தது. பின்னர் அன்று காலையே அவை அழித்து நீக்கப்பட்டன.
உக்ரேன் - இரஷ்யா யுத்தத்தில் பிரான்ஸ் உக்ரேனுக்கு ஆதரவாக உள்ளது. இதனைக் கண்டித்து இரஷ்ய ஆதரவாளர்கள் மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், பொது இடங்களை சேதப்படுத்தியமை சிறிய குற்றப்பணம் அறவிடக்கூடிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025