Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாகும் வாய்ப்பை தவிர்த விஜய் சேதுபதி

கீர்த்தி ஷெட்டியுடன்  ஜோடியாகும் வாய்ப்பை தவிர்த விஜய் சேதுபதி

8 ஆனி 2024 சனி 07:36 | பார்வைகள் : 11633


’என் மகன் வயதை ஒத்தவரும், ’உப்பெனா’ திரைப்படத்தில் மகளாக நடித்தவருமான கீர்த்தி ஷெட்டி, என்னுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை வலிய தவிர்த்தேன்’ என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

வித்தியாசமான நடிப்பு மட்டுமன்றி, தனது தனித்துவ குணாதிசயம் மற்றும் அதனை வெளிப்படுத்துவதிலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. இவரது முதன்மை தோற்றத்திலான ’மகாராஜா’ திரைப்படம் அடுத்த வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதனையொட்டிய சந்திப்பு ஒன்றில், பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி, டோலிவுட் தாரகை கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடி சேரும் வாய்ப்பை தான் தவிர்த்தது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் டிஎஸ்பி. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக முதலில் பரிசீலிக்கப்பட்டவர் கீர்த்தி ஷெட்டி. தென்னகத்தில் வேகமாக வரவேற்பு பெற்று வளர்ந்துவரும் கீர்த்தி ஷெட்டியை டிஎஸ்பியில் நடிக்க வைப்பதன் மூலம் திரைப்படத்தின் வருமான சந்தை மேலும் விரிவடையும் என்பது தயாரிப்பாளர் கணக்காக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை விஜய் சேதுபதி வலிய தடுத்தாராம்.

தனது மகனை விட சற்றே வயதில் பெரியவரான கீர்த்தி ஷெட்டி தனக்கு ஜோடியாக இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதோடு, கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக ’உப்பென’ படத்தில் தான் நடித்தது குறித்து டிஎஸ்பி தயாரிப்பாளர் அறிந்திராததும் இந்த தடுமாற்ற பரிசீலனையின் பின்னணியில் இருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். கீர்த்தி ஷெட்டியை தெலுங்குக்கு வெளியேயும் பரவலாக அறியச் செய்ததில் உப்பென திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த திரைப்படத்தில் கீர்த்தியின் தந்தையாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார்.

”உப்பென படத்தில் என்னுடனான காட்சிகளில் கீர்த்தி ஷெட்டியின் தேகம் நடுங்குவதை ஒரு சில தருணங்களில் கவனித்திருக்கிறேன். அவர் எனது நடிப்பில் தனது தந்தையை கண்டுகொண்டதையும் பின்னர் புரிந்து கொண்டேன். இதனால் பிற்பாடு கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு டிஎஸ்பி திரைப்படத்துக்காக வந்தபோது அதனை நான் வலிய மறுத்துவிட்டேன்” என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50வது திரைப்படம் என்ற பெருமையுடன் ஜூன் 14 அன்று திரையரங்குகளில் மகாராஜா வெளியாக இருக்கிறது. ’குரங்கு பொம்மை’ நித்திலன் சுவாமிநாதன் இதனை இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகர்-இயக்குனர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் மற்றும் அபிராமி ஆகியோர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்