சிரியாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி
8 ஆனி 2024 சனி 03:14 | பார்வைகள் : 11737
வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் உட்பட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஆதரவற்றோர்கள் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒராண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்தது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மலை குன்றின் ஓரம் மற்றும் ஆற்றில் மீட்புக் குழுக்கள் சுமார் 6 மணி நேரம் தேடி வருவதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
பேருந்து சாலையை விட்டு விலகியமைக்கான காரணம் இது வரை தெரியவராததால் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan