விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்

8 ஆனி 2024 சனி 03:07 | பார்வைகள் : 7112
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ராக்கெட்டை SpaceX உருவாக்கியுள்ளது.
மெக்சிகோ வளைகுடாவில் இருந்து 2024.06.06 காலை இந்திய பெருங்கடலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில், திட்டமிட்டபடி முதல் நிலை பூஸ்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து விரிகுடாவில் விழுந்து ஸ்டார்ஷிப் ஆறு ராப்டார் என்ஜின்களுடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன் மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வெடித்துச் சிதறியதால் சோதனை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு பூமிக்கு திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.