இலங்கையில் தேடப்படும் நபர் - பொது மக்களிடம் உதவியை நாடு பொலிஸார்

25 ஆவணி 2023 வெள்ளி 13:33 | பார்வைகள் : 9894
இலங்கையில் தேடப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை கோரி சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
நேற்று (24) மாலை பண்டாரவளை ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையின் பின்னர், சந்தேக நபர் தப்பிச் சென்றதுடன், அவரது புகைப்படத்தை பொலிஸார் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் (பண்டாரவளை) - 0718 591523
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி - 0718 710108 - 0718594033