இலங்கையில் மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதம்
 
                    7 ஆனி 2024 வெள்ளி 05:27 | பார்வைகள் : 12163
மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளன.
56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஒருவரைக் காணவில்லை எனவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan