Paristamil Navigation Paristamil advert login

சூரிக்காகக் காத்திருக்கும் பிரபல இயக்குனர்…

சூரிக்காகக் காத்திருக்கும் பிரபல இயக்குனர்…

6 ஆனி 2024 வியாழன் 15:30 | பார்வைகள் : 5156


கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியின் மூலம் சூரி, தன்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் அவரை இயக்க முன்னணி இயக்குனர்கள் கூட பலர் ஆவலாகக் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இயக்குனர் லிங்குசாமியும் இருக்கிறாராம். ஆனால் சூரியிடம் இருந்து நேர்மறையான சிக்னல் கிடைக்கவில்லையாம்.லிங்குசாமி இயக்கிய ஜி திரைப்படத்தில் சூரி ஒரு சூழ்நிலை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சூரியின் கால்ஷீட்டுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நகைமுரண்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்