■ அவதானம் : தொடருந்திகளில் கைவிடப்பட்ட பொதிகள் மீளப்பெற முடியாது!
6 ஆனி 2024 வியாழன் 08:00 | பார்வைகள் : 9820
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது தொடருந்துகளில் மறந்து விடப்படும் பொதிகள் எக்காரணம் கொண்டும் மீளப்பெற முடியாது என RATP நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தொடருந்து சேவைகள் எக்காரணம் கொண்டும் தடைப்படவோ, தாமதிக்கவோ RATP தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்துகளில் கைவிடப்படும் பொதிகள், ‘தொலைந்த பொதிகளாக’ கருதப்பட்டு அவை அகற்றப்படுமே தவிர்த்து, அது பாதுகாக்கப்பட்டு உரிமையாளருக்கு மீண்டும் வழங்கப்படுவது போன்ற சம்பவங்கள் எக்காரணம் கொண்டும் இடம்பெறாது எனவும், அவற்றினை மீளப்பெறவே முடியாது எனவும் RATP அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan