Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில்  சக்திவாய்ந்த நிடுநடுக்கம்... 

 இந்தோனேசியாவில்  சக்திவாய்ந்த நிடுநடுக்கம்... 

5 ஆனி 2024 புதன் 16:23 | பார்வைகள் : 4005


இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமிக்கான எந்த அறிவிப்பும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்