சரத் வீரசேகரவை கைதுசெய்யுமாறு வடக்கில் போராட்டம்!
25 ஆவணி 2023 வெள்ளி 07:43 | பார்வைகள் : 9684
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் பல பகுதிகளில் இன்று சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்து உரை நிகழ்த்தியமை யை கண்டித்து வெள்ளிக்கிழமை(25) காலை மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் பணிப்பகிஸ்கரிப்பு க்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஸ்கரிப் பை முன்னெடுத்தனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பிற்கு பிறகு எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் அல்லது விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
மேலும் இவ்வாறான அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற்றால் அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கோரிக்கையை முன் வைத்தனர்.


























Bons Plans
Annuaire
Scan