நடிகை சுனைனாவுக்கு திருமணமா?

5 ஆனி 2024 புதன் 14:26 | பார்வைகள் : 5066
நடிகை சுனைனா லாக் ஆன புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனக்கு விரைவில் திருமணம் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரை உலகில் 'காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுனைனா, அதன்பின் ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’நீர்ப்பறவை’ ’தெறி’ ‘கவலை வேண்டாம்’ ’தொண்டன்’ ’காளி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு வெளியான ’ரெஜினா ’என்ற படத்தில் கூட அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் திரைப்படங்கள் மட்டும் இன்றி அவர் சில வெப் தொடர்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலை தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவருடைய கை இன்னொரு ஆண் கையுடன் இருப்பதை யாருக்கு இந்த பதிவில் அவர் லாக் எமோஜியையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025