Paristamil Navigation Paristamil advert login

பிரேம்ஜியின் மணமகள் குறித்து குழப்பம்..

பிரேம்ஜியின் மணமகள் குறித்து குழப்பம்..

5 ஆனி 2024 புதன் 11:53 | பார்வைகள் : 3916


நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு திருமணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். பிரேம்ஜி திருமணம் செய்ய போகும் மணப்பெண் பெயர் இந்து என்றும் இருவரது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் அந்த திருமண பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் செய்ய போகும் மணப்பெண் இந்து மீடியாவை சேர்ந்தவர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாகுபலி, சொப்பன சுந்தரி போன்ற உதாரணத்தை காண்பித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் அந்த அறிக்கை இதோ:

இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகின்றோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை.

திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்