Caregiver பணியாளர்களுக்கான தேவை அதிகம் - கனடா அரசு அறிவிப்பு
5 ஆனி 2024 புதன் 08:36 | பார்வைகள் : 12308
கனேடிய மக்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, Caregiver பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அடுத்த ஆறு ஆண்டுகளில், சுமார் 9 மில்லியன் கனேடியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை கவனித்துக்கொள்ள ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
ஏற்கனவே Caregiver பணியிலிருப்போரில் பலர் 65 வயதைக் கடந்தவர்கள் என்றும் இனி அவர்களை கவனித்துக்கொள்வதற்கு பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஆக, இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, Caregiver பணியாளர்களுக்காக கனடா இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, தகுதியும் அனுபவமும் உடைய, கனேடிய உயர்நிலைப்பள்ளி பட்டயப்படிப்புக்கு இணையான படிப்பை முடித்த, Caregiver பணிக்காக கனடா வருபவர்களுக்கு எளிதில், அல்லது கனடாவுக்குள் நுழைந்ததுமே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Caregiver பணி என்பது, வயதானவர்களை மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களையும் கவனித்துக்கொள்ளும் பணியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan