Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் 'விடாமுயற்சி' படம் என்ன ஆச்சு?

அஜித்தின்  'விடாமுயற்சி'  படம் என்ன ஆச்சு?

4 ஆனி 2024 செவ்வாய் 14:25 | பார்வைகள் : 5173


அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இப்போது வரை அந்த படத்தின் படப்பிடிப்பு 60% வரை தான் முடிந்திருப்பதாக சமீபத்தில் மகிழ் திருமேனி பேட்டி அளித்தது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 7ஆம் தேதி வரை ஐதரபாத்தில் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்கு அஜித் செல்வார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’விடாமுயற்சி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்பதை அஜித் அறிந்தவுடன் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் இதையடுத்து தான் தயாரிப்பு தரப்பு ஜப்பானில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதே ரீதியில் சென்றால் விடாமுயற்சிக்கு முன்பாகவே ’குட் பேட் அக்லி’படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ’விடாமுயற்சி’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று கூறப்படுவது அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்