Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வுக்கு மக்கள் முழு ஆதரவு

தி.மு.க.,வுக்கு மக்கள் முழு ஆதரவு

4 ஆனி 2024 செவ்வாய் 13:02 | பார்வைகள் : 8153


தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாற்பதும் நமதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியது போல் 38 ல் வெற்றியை நெருங்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுக மண்ணை கவ்வியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் பா.ஜ., இது வரை இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. , 7 தொகுதிகளில் அதிமுக 3 வது இடத்திற்கும் 3 தொகுதிகளில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுச்சேரி, வேலூர், தேனி, ராமநாதபுரம் தொகுதிகள் பா.ஜ.,வுக்கு 2 இடத்தை தந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்