Paristamil Navigation Paristamil advert login

ஓய்வை அறிவித்த இந்திய அணியின் வீரர்  கேதர் ஜாதவ்...!

ஓய்வை அறிவித்த இந்திய அணியின் வீரர்  கேதர் ஜாதவ்...!

4 ஆனி 2024 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 4377


அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக அறிமுகமாகும் முன், உள்நாட்டு கிரிக்கெட்டில் அதாவது IPL போட்டியில் அறிமுகமாகி விளையாடி வந்தார்.

2010 ஆம் ஆண்டு IPL தொடரில் தனது பயணத்தை தொடங்கிய அவர், போட்டியில் களமிறங்கினார். 2010 இல், அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகளுக்காகவும் விளையாடி இருந்தார்.

கேதர் ஜாதவ் IPL இல் 93 ஆட்டங்களில் விளையாடி நான்கு அரை சதங்களின் உதவியுடன் 1196 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்