பாஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் - ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள்!

4 ஆனி 2024 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 11577
ஐக்கிய நாடுகளின் 146 நாடுகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்காக நாடுகள் தங்கள் அரசியல் இராஜதந்திர வளங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது பாலஸ்தீன மக்களின் உரிமைகளை அவர்களின் போராட்டங்களை சுதந்திரம் விடுதலைக்கான அவர்களின் துயரங்களை அங்கீகரிப்பதாகும் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் பாலஸ்தீனத்திலும் மத்தியகிழக்கிலும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கான முன்நிபந்தனை இதுவென ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025