பணம் எடுத்துச் சென்ற கவச வாகனம் மீது தாக்குதல்… துப்பாக்கிச்சூடு..!
3 ஆனி 2024 திங்கள் 21:34 | பார்வைகள் : 15705
பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் மீது இன்று திங்கட்கிழமை காலை தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
Val-d'Oise மாவட்டத்தின் Saint-Ouen-l'Aumône நகரில் இன்று ஜூன் 3, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. d'Épluches பகுதியில் உள்ள N184 சாலையில் பயணித்த குறித்த கவச வாகனத்தை மூன்று ஆயுததாரிகள் வழிமறித்தனர்.
பின்னர், ஆயுத்தினால் மிரட்டி கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயன்றபோது, கவச வாகன பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதையடுத்து, கொள்ளையர்கள் மூவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பணம் எதுவும் கொள்ளையிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan