இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்த்
3 ஆனி 2024 திங்கள் 08:45 | பார்வைகள் : 4929
இலங்கையில் நடத்தப்படும் முன்னணி கிரிக்கெட் போட்டியான எல்பிஎல் தொடரில் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகிய V. வியாஸ்காந்த் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ளமையானது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கட் பேரவை உலகக்கிண்ண T20 போட்டிக்கான உத்தியோகபூர்வ உடையுடன் இருக்கும் வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கட் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற வியாஸ்காந்தின் புகைப்படத்தையும் கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்
இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டிருந்த வியாஸ்காந்த் இலங்கை T20 தேசிய குழாமில் 16வீரர்களின் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தர்.
யாழ்ப்பாணத்தை தனது தாய்நிலமாக கொண்ட வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கட்டார்.
இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட அவர் சர்வதேச முன்னணி வீரர்களின் பார்வைக்கு ஈர்க்கப்பட்டு இலங்கை அணிக்கு வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பீரிமியர் லீக் (LPL), பங்களாதேஷ் பிரீமியர் லீக், அபு தாபி T10, ஐபிஎல் மற்றும் ILT20 போன்ற தொடர்களில் விளையாடி சர்வதேச அனுபவத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலை காலங்களில் இருந்தே கிரிக்கெட்டில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan