'இந்தியன் 2' ல் அனிருத் பாடியது எத்தனை பாடல்கள்?
1 ஆனி 2024 சனி 15:36 | பார்வைகள் : 6457
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன் அனிருத் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ள நிலையில் அதில் 4 பாடங்களை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களை விவரங்கள் இதோ.
1. பாரா: எழுதியவர்: பா விஜய் பாடியவர்கள்: அனிருத் மற்றும் ஸ்ருதிகா சமுத்ரா
2. காலண்டர் சாங்: எழுதியவர்: கபிலன் வைரமுத்து: பாடியவர்கள்: சுவி, ஐஸ்வர்யா சுரேஷ்
3.நீலோற்பம்: எழுதியவர்: தாமரை பாடியவர்கள்; அபி , ஸ்ருதிகா சமுத்ரா
4. ஜகா ஜகா: அனிருத்
5. கம்பேக் இந்தியன்: எழுதியவர்: அறிவு பாடியவர்; அனிருத்
6. கதறல்ஸ்: ரோகேஸ் பாடியவர்: அனிருத்
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.


























Bons Plans
Annuaire
Scan