Paristamil Navigation Paristamil advert login

வில்லனாக நடிக்கிறாரா அஜித்?

வில்லனாக நடிக்கிறாரா அஜித்?

1 ஆனி 2024 சனி 10:27 | பார்வைகள் : 8106


அஜித் இதுவரை ஒரு சில படங்களில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருந்தாலும், எந்த ஹீரோவுக்கும் வில்லனாக நடிக்கவில்லை என்ற நிலையில் ஒரு பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படங்களில் தான் இதுவரை வில்லனாக பாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பாக ’விவேகம்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி அஜித்தின் 64வது சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் அஜித் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் அஜித் கடந்த 2001 ஆம் ஆண்டு ’அசோகா’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் பாலிவுட் திரையுலகில் அவர் நடிக்க இருப்பதாகவும் அதுவும் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை? எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வர்த்தக‌ விளம்பரங்கள்