Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி உபகரண ஏற்றுமதிக்கு சீனா தடை விதிப்பு

விண்வெளி உபகரண ஏற்றுமதிக்கு சீனா தடை விதிப்பு

1 ஆனி 2024 சனி 10:20 | பார்வைகள் : 4642


உலக நாடுகள் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் பெரும் ஆர்வத்தை காட்டி வருகின்றது.

விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

அதேவேளை தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்