D-DAY என அழைக்கப்படும் 80ம் ஆண்டு தரையிறக்க நிகழ்வில் Russie அழைக்கப்படாதது ஏன்? l’Elysée மாளிகை.
1 ஆனி 2024 சனி 09:00 | பார்வைகள் : 8395
வரும் யூன் மாதம் 6ம் திகதி பிரான்ஸ் Normandie பகுதியில் நடைபெறவுள்ள இரண்டாம் உலகப்போரின் நேசநாட்டு படைகளின் வெற்றியின் ஒரு சிறப்பு பகுதியான Normandie தரையிறக்கத்தின் 80வது ஆண்டு நிறைவு நிகழ்வில் Russie தலைவர் Vladimir Poutine அழைக்கப்படாதது ஏன் என பிரான்ஸ் அரச மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.
"இரண்டாம் உலகப்போரில் சோவியத் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களின் முக்கியத்துவம் மற்றும் 1945 இன் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது, மறக்கவோ, மறுக்கவோ முடியாது, ஆனாலும் Russie இன்று Ukraine மீது தொடுத்துள்ள போரின் காரணமாகவே அவர்களை பிரான்சுக்குள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என l’Elysée மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.
2014ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற 70வது தரையிறக்க நிகழ்வுகளில் Russie சிறப்பாக பங்கெடுத்தது ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது இன்று Russie தலைவர் Vladimir Poutine பிரான்சில் கால் பதித்திருக்க முடியாது அவரும் அதனை விரும்பமாட்டார் காரணம் அவர் உண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்டிற்கு உட்பட்டவர், எனவே அவர் பிரான்சில் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan