பிரான்சின் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட யூடியூப்பர்.. பிரதமர் வாழ்த்து!
31 வைகாசி 2024 வெள்ளி 13:07 | பார்வைகள் : 18479
பிரான்சின் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட (d'abonnés) யூடியூப்பராக மாறியுள்ள Tibo InShape இற்கு பிரதமர் கேப்ரியல் அத்தால் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
19.4 மில்லியன் பின் தொடர்பவர்களை அவர் பெற்றுள்ளார். பிரான்சில் அதிகளவானவர்கள் பின் தொடரும் சனலாக இருந்த Squeezie இனை பின் தள்ளி Tibo InShape முதலிடத்துக்கு வந்துள்ளார்.
ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில் காணொளிகளை தயாரித்து வந்த அவர், தற்போது சர்வதேச பார்வையாளர்களை கவர ஆங்கில மொழியில் காணொளிகளை தயாரித்து வருகிறார். அவருக்கு பிரதமர் கேப்ரியல் அத்தால் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan