Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் அதிகரிக்கும்  துப்பாக்கி சூடு சம்பவங்கள் 

அமெரிக்காவில் அதிகரிக்கும்  துப்பாக்கி சூடு சம்பவங்கள் 

31 வைகாசி 2024 வெள்ளி 09:02 | பார்வைகள் : 7025


அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவைத்துள்ளது.

இந்நிலையில் இன்றும் இடம்பெற்ற துப்பாகிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க மினிசொட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரின் வொய்டியர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

இதன் மூலம் இச்சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்