பிரித்தானியாவில் முதன்முறையாக இடம்பெற்ற கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை
24 ஆவணி 2023 வியாழன் 09:05 | பார்வைகள் : 10506
பிரித்தானியாவில், பெண் ஒருவருக்கு முதன்முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்து அதில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் வாழும் பெண் ஒருவர் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரால் தாயாக முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதாவது, அவரது கருப்பை குழந்தையை சுமக்கும் தன்மையில் இல்லை அதனால் அவரால் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது அக்கா, தனது கர்ப்பபையை தன் சகோதரிக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, மருத்துவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு ஒன்று, 17 மணி நேரம் நிகழ்ந்த அறுவை சிகிச்சை ஒன்றில், அக்காவின் கருப்பையை தங்கைக்கு பொருத்தியுள்ளனர்.
கர்ப்பப்பை பொருத்தப்பட்டு இரண்டு வாரங்களில் தங்கைக்கு மாதவிடாயும் வந்துவிட்டது.
அதாவது, அவரது இனப்பெருக்க உறுப்புகள், தானமாக பெறப்பட்ட கர்ப்பப்பை வரை, சரியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோய் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும், இந்த அறுவை சிகிச்சை மூலம், கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள கூடிய வசதி தற்பொழுது பெறப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan