ஒலிம்பிக் தீபத்தினைக் காண ஒன்றுகூடும் 50,000 பேர்!

31 வைகாசி 2024 வெள்ளி 08:05 | பார்வைகள் : 12402
ஒலிம்பிக் தீபம் இன்று மே 31, வெள்ளிக்கிழமை Mont-Saint-Michel தீவுக்கு கொண்டுவரப்பட உள்ளது. தீபத்தினைக் காண 50,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் முழுவதும் சுற்றிக்கொண்டுவரப்படுகிறமை அறிந்ததே. இன்று வெள்ளிக்கிழமை Cherbourg-en-Cotentin, Saint-Vaast-la-Hougue, Saint-Lô, Sainte-Mère-Église, Granville, Villedieu-les-Poêles-Rouffigny ஆகிய நகரங்களுக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் இறுதியாக Mont-Saint-Michel தீவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.
அங்கு முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான 101 வயதுடைய Roger Lebranchu என்பவர், ஒலிம்பிக் தீபத்தினை சில நிமிடங்கள் கொண்டுசெல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mont-Saint-Michel தீவில் ஒலிம்பிக் தீபத்தினைக் காண 50,000 பேர் ஒன்றுகூடுவார்கள் எனவும், மொத்தமாக 600 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025