RCB அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்
1 ஆடி 2024 திங்கள் 09:12 | பார்வைகள் : 6816
IPL போட்டியில் RCB அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதாக கடந்த மாதங்களில் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து அவருடைய பிறந்தநாள் அன்று கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 T20 போட்டிகளில் விளையாடி இருந்தார்.
IPL தொடரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளில் விளையாடி 4,842 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று RCB அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக RCB அணியின் அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan