Paristamil Navigation Paristamil advert login

இந்தியளவில் இன்ஸ்டாகிராமில் அதிக Likes பெற்ற விராட் கோலியின் பதிவு 

இந்தியளவில் இன்ஸ்டாகிராமில் அதிக Likes பெற்ற விராட் கோலியின் பதிவு 

1 ஆடி 2024 திங்கள் 09:11 | பார்வைகள் : 3655


இந்தியளவில் அதிக Likes பெற்ற பெருமையை விராட் கோலியின் சமீபத்திய பதிவு பெற்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பதிவு போட்டுள்ளார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதை கொண்டாடும் விதமான அனைத்து வீரர்களும் தங்களது சமூக ஊடகங்களில் பல பதிவுகளை வெளியிட்டு இருந்தார்கள்.

அதில் விராட் கோலியின் பதிவு இந்தியளவில் வைரலாகி இருக்கிறது. அதாவது இந்தியளவில் அதிக Likes பெற்ற பெருமையை பெற்றுள்ளது.

குறித்த பதிவில் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக தனது நன்றியைத் தெரிவித்தள்ளார்.

 மேலும் இவர் பகிர்ந்திருந்த பதிவிற்கு சுமார் 16.4 மில்லியனுக்கும் அதிகமான Likes கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்