Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் பெய்து வரும் கன மழை.... நால்வர் பலி

சுவிட்சர்லாந்தில் பெய்து வரும் கன மழை.... நால்வர் பலி

1 ஆடி 2024 திங்கள் 08:49 | பார்வைகள் : 1040


சுவிட்சர்லாந்தில் வெள்ளம் மற்றும் நில சரிவால் நால்வர் உயிரிழந்த்ததுடன், இரண்டு பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் நில சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் வலாய்ஸ் கேன்டன் காவல் துறை வெளியிட்ட செய்தியில், பின் என்ற கிராமத்தில் 52 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிய வந்தது.

இதுபற்றிய விசாரணையில், சாஸ்-கிரண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்த நபர் உயிரிழந்து கிடக்கிறார் என தெரிய வந்தது என தெரிவித்தனர். இதுதவிர லாவிஜாரா பகுதியில் ஒருவரும்  வலாய்ஸ் கேன்டன் பகுதியில் மற்றொரு நபர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இத்தாலியிலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் வெள்ளத்தில் காக்னி பகுதியில் இருந்து 200 பேரும், ஆல்பைன் கிராமத்தில் இருந்து 120 பேரும் மீட்கப்பட்டு உள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்