Paristamil Navigation Paristamil advert login

Essonne : பூங்கா ஒன்றில் இருந்து 7 வயது சிறுவனின் சடலம் மீட்பு..!

Essonne : பூங்கா ஒன்றில் இருந்து 7 வயது சிறுவனின் சடலம் மீட்பு..!

1 ஆடி 2024 திங்கள் 08:38 | பார்வைகள் : 6988


Épinay-sous-Sénart (Essonne) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து ஏழு வயதுடைய சிறுவனது சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் அவனது மாமா முறையுள்ள ஒருவரோடு அங்குள்ள Parc de l'Europe பூங்காவுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை வருகை தந்திருந்த நிலையில், சில நிமிடங்களிலேயே மாமாவுடைய கண்களில் இருந்து ஓடி மறைந்துள்ளார். சில நிமிடங்களில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் மர்மம் நீடிக்கிறது. இன்று ஜூலை 1 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற உள்ள உடற்கூறு பரிசோதனைகளுக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனது உறவினர்கள் இருவர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்