அமெரிக்காவில் பொலிஸார் சுட்டு கொல்லப்பட்ட 13 வயது சிறுவன்
30 ஆனி 2024 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 13828
அமெரிக்காவின் நியூயார்க்கில் மாகாணத்தின் யூட்டிகா நகரில் 13 வயது சிறுவன் ஒருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் அடையாளங்களுடன் ஒத்திருந்த இரண்டு 13 வயது சிறுவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணை நடத்தப்படும் போது, பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் வில்லியம்ஸ் வழங்கிய தகவலின் படி, நயா எம்வே (Nyah Mway) என்ற சிறுவன் தப்பி ஓட முயற்சித்ததால், காவல்துறையினர் அவரை துரத்திச் சென்றனர்.
அப்போது துப்பாக்கி போன்று தோன்றிய ஒன்றை" சிறுவன் வைத்திருந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒரு காவலர் அவரை தரையில் தள்ளி விழ வைத்தார்.
மோதல் தீவிரமடைந்த நிலையில் மற்றொரு காவலர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் மார்பில் பாய்ந்து உள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று அதிகாரிகளும் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan