நைஜீரியாவில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்

30 ஆனி 2024 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 6837
வடகிழக்கு நைஜீரியாவில் சனிக்கிழமையன்று மூன்று இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் பெண் தற்கொலைப்படையினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
குவோஜா நகரில் உள்ள மருத்துவமனை மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேபோல் திருமண நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் வெடிகுண்டு கட்டி தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.
குவோஜாவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது.
2014-ஆம் ஆண்டில், வடக்கு போர்னோ பகுதியில் உள்ள குவோசா, போகோ ஹராம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது. நைஜீரிய பாதுகாப்புப் படையினர் 2015-இல் குவோசாவைக் கைப்பற்றினர்.
இதையடுத்து போகோ ஹராம் தீவிரவாதிகள் குவோசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இதுவரை 40,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் 20 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025