வெளியானது விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

30 ஆனி 2024 ஞாயிறு 13:54 | பார்வைகள் : 7020
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு 7.03 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வருவதால் ரசிகர்கள் இந்த அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் சற்று முன் அந்த அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அஜித் கோட் சூட் அணிந்து கையில் ஒரு பேக் உடன் கூலர் கண்ணாடி அணிந்து அஜர்பைஜான் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருப்பது போன்ற இந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் உள்ளது. மேலும் ’விடாமுயற்சி திருவினையாக்கும்’ என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025