Paristamil Navigation Paristamil advert login

பார்லிமென்டில் விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

பார்லிமென்டில் விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

30 ஆனி 2024 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 3796


எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூரில் செய்தியாளர்களுக்கு அனுராக் தாக்கூர் அளித்த பேட்டி: பொதுமக்கள் எதிர்க்கட்சிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் விவாதத்தில் இருந்து ஓடுவதை தவிர்க்க வேண்டும்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன். இந்திய அணி இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு பங்கு வகித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்