திருமண சடங்கு நிகழ்ச்சிகளில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்! 18 பேர் பலி

30 ஆனி 2024 ஞாயிறு 09:23 | பார்வைகள் : 6452
நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத அமைப்புகள் நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நைஜீரியாவின் பர்னோ மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி மற்றும் மருத்துவமனையில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை பெண் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025