முதல்வர் மம்தா மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு
29 ஆனி 2024 சனி 07:44 | பார்வைகள் : 6094
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ், கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பேசும் போது, ‛‛ சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக்கூறியிருந்தார். இதனை திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வழிமொழிந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஆனந்த போஸ், மக்கள் பிரதிநிதிகள் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பரப்பக்கூடாது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்காக மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan