இத்தாலியில் மனைவியை கத்தியால் குத்திய இலங்கையர் சடலமாக மீட்பு

28 ஆனி 2024 வெள்ளி 14:48 | பார்வைகள் : 4278
இத்தாலியில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணை கடந்த 26ஆம் திகதி கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்திய கணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் வசித்த வீட்டின் விட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவர், பின்னர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.